திமுக கூட்டணி கட்சி தலைவர் மறைவு! மு.க. ஸ்டாலின் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருதாஸ் தாஸ்குப்தா (83). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வந்த குருதாஸ் தாஸ்குப்தா, இருதயம் மற்றும் சிறுநீரக கோளாறு  நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை குருதாஸ் தாஸ்குப்தா காலமானார். குருதாஸ் தாஸ்குப்தாவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியவை, 

கம்யூனிச சித்தாந்தந்தவாதியும், பாராளுமன்ற ஜனநாயகவாதியுமான திரு. குருதாஸ் தாஸ்குப்தா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 83-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர் பருவத்திலேயே கம்யூனிச இயக்கத்தின் கோட்பாட்டினை தனது தோள்மீது சுமந்து பரப்பும் மிகச்சிறந்த இலட்சியவாதியான திரு. குருதாஸ் தாஸ்குப்தா அவர்கள், மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராக, இருமுறை மக்களவை உறுப்பினராக பணியாற்றி, தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் துணிச்சலாக தொய்வின்றி உரிமைக் குரல் எழுப்பியவர். இரு அவைகளிலும் இருந்தபோது நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குழுக்களில் இடம்பெற்று ஆக்கபூர்வமான பாராளுமன்ற பணியாற்றி ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்று அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

அடக்குமுறை சட்டங்களில் கைது செய்யப்பட்டாலும் தனது ஆர்ப்பரிக்கும் எழுச்சி முழக்கத்தை பாராளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அச்சமின்றி எழுப்பிய அவர் பழகுவதற்கு இனிமையானவர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்த அவர்- தலைவர் அவர்களுடன் நெருக்கமாகவும், நட்புடனும் பழகியவர்.

அவரின் மறைவால், ஜனநாயகம் தனது புதல்வர்களில் ஒருவரை இன்று இழந்து விட்டது. திரு. குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் - கம்யூனிச சித்தாந்தத்திற்கும் - தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும்,- அவர் இறுதி மூச்சு வரை போராடிய தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin mouring gurudas dasgupta


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->