ஸ்டாலினின் அடுத்த மாஸ்டர் பிளான்! திமுக எம்.பி.க்களுடன் திடீர் ஆலோசனை!! - Seithipunal
Seithipunal


இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 40 திமுக எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை முறையாக தொகுதிகளுக்கு செலவு செய்வது குறித்து மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

அவரவர் தொகுதிக்கு சென்று மக்கள் பிரச்சனைக்காக பாடுபட வேண்டும் என்றும் கூறினார். தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களை நேரடியாக சந்தித்தும் மனுக்களை பெற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin meeting for dmk mps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->