நாங்க செய்ததில் எந்த தவறும் இல்லை! இது தான் எங்க வேலை! எடப்பாடி பழனிசாமிக்கு, பதிலடி கொடுத்த முக ஸ்டாலின்!! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரங்கள் குறித்த வீடியோ ஒன்றை பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கடந்த வாரம் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும், அவர் இது தொடர்பாக 5 நபர்களை கொலை செய்திருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்தன. மேலும், இதில் சம்மந்தப்பட்ட முதல்வர் பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என முக ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்லி சென்ற தமிழக காவல் படை, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை கைது செய்தது. 

இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ்க்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  
கொடநாடு விவகாரத்தில் கைதான சயன், மனோஜுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களும், ஜாமின் கொடுத்தவர்களும் திமுகவை சேர்ந்தவர்கள் என தமிழக முதல்வர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், சயான், மனோஜ்க்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் வாங்கிக் கொடுத்ததில் தவறு இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு விளக்கம் அளித்ததுள்ளார். 

மேலும், குற்றசாட்டுபவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில் என ஸ்டாலின் விளக்கினார்.

English Summary

MK Stalin Detail Statement


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal