ஒற்றை செருப்பில்., மொத்த தமிழர் பண்பாட்டையும் சிதைத்த முக ஸ்டாலின்.! இன்று காலை அரங்கேறிய கூத்து.!  - Seithipunal
Seithipunal


நாளை தமிழகம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. திமுக சார்பில் சமத்துவ பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று காலை திருவாரூர் மாவட்டம் நத்தம் கிராமத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே தமிழர்கள் பொங்கல் என்று கொண்டாடி வந்த நிலையில். சமத்துவ பொங்கல் என்ற ஒரு பொங்கலை திமுக அறிமுகம் செய்தது. இந்த பொங்கலின் விதிமுறைகளில் ஒருவித முறையாக தற்போது, காலில் காலணி அணிந்துகொண்டு பொங்கலை கொண்டாடலாம் என்று ஸ்டாலின் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் வைக்கும் கருத்துக்களின் தொகுப்பு பின் வருமாறு:

பொங்கல் கொண்டாடுவது ஒரு இறை வழிபாட்டுக்கு சமமான ஒன்று. இயற்கையை கடவுளாக எண்ணி அதற்கு பொங்கல் வைத்து வணங்கி வழிபடும் நிகழ்வு. ஸ்டாலின் கொண்டாடிய இந்த பொங்கலில் காலில் காலணி அணிந்துகொண்டு பொங்கல் பானையில் கரண்டியை விட்டு கிண்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதில், முக ஸ்டாலின் காலணி (ஷூ) அணிந்து இருப்பது தெரியாத வண்ணமே புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதனையே முக ஸ்டாலினும் வெளியிட்டு உள்ளார். அதே சமயத்தில் வெளியான வீடியோக்களில் அவர் காலணி அணிந்து இருப்பது நன்றாகவே தெரிந்துள்ளது. 

எந்த ஊரு தமிழனும் இயற்கையை வணங்கி பொங்கல் வைத்து வழிபடும் போது இப்படி ஒரு செயலை (காலனி அணிந்து) செய்ய துணிய மாட்டான். இந்த சமத்துவ பொங்கலில் இதுபோன்ற ஒரு விதி இருக்கலாம் என்று தெரிகிறது.

வரும் காலங்களில் சமத்துவ பொங்கல் கொணடாடும் போதும், குத்து விளக்கு ஏற்றும் போதும் காலணி அணிந்து கொண்டாடலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தால், இது குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழாது என்று தெரிகிறது.

விவசாயிகள் புனிதமாக எண்ணும் வயல்வெளியில் அதுவும் குறிப்பாக கரும்பு தோட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்து சென்று வந்தவர் தான் திமுக தலைவர் என்பதால், இது ஒரு பெரிய விவகாரமாக திமுகவினர் இடையே எழாது என்று தெரிகிறது.

அதே சமயத்தில் வரும் சந்ததியினர் காலணி அணிந்து தைப்பொங்கலுக்கு இயற்கை அன்னையை வழிபட இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிட்டால், நாளை தமிழர் பண்பாடு எப்படி நிலைத்து இருக்கும்?. சமத்துவ பொங்கலுக்கும், தமிழர்களின் பொங்கலுக்கும் சம்மந்தமில்லை என்று முக ஸ்டாலின் அறிவித்துவிட்டால், வரும் காலங்களில் தமிழர் பண்பாட்டுக்கு எதிரான இந்த பொங்கலை வரும் சந்ததியினர் புறம்தள்ளி, தமிழ் பண்பாட்டை வளர்க்க ஏதுவாக இருக்கும்" என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN against tamil culture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->