நடிகரின் கட்சியில் களமிறங்கும் முக அழகிரி?! அதிர்ச்சியில் திமுக வட்டாரம்!  - Seithipunal
Seithipunal


சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் தலைமைக்கான  இடம் வெற்றிடமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

அவரது பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் தலைமைக்கான வெற்றிடத்தினை திமுக தரப்பில் ஸ்டாலின் பூர்த்தி செய்து விட்டார் எனவும், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் பூர்த்தி செய்து விட்டனர் எனவும் மாறி மாறி அக்கட்சியினர் பேட்டி அளித்து வந்தனர். 

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மைதான் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வெற்றிடத்தை ரஜினி அரசியலுக்கு வந்து பூர்த்தி செய்வார் எனவும் அழகிரி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து ஏற்கனவே ரஜினியுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் முக அழகிரி அவருடன் இணைந்து அரசியல் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ஏனெனில் ஒவ்வொரு நடிகரும் தனித்தனியாக கட்சி தொடங்கும் போதும், நிலையான வாக்கு வங்கியில் இருந்து கணிசமான வாக்குவங்கி பிரியும் என்பதே திமுக வட்டாரத்தின் அதிர்ச்சிக்கு காரணம் என்கின்றனர் அறிவாலயம் வட்டாரத்தினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK azhagiri support rajini statement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->