#BigBreaking || புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட முக அழகிரி.!  - Seithipunal
Seithipunal


இன்று மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், எனது ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நான் முடிவு எடுப்பேன்." என்று கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி தெரிவித்து இருந்தார்.

சொன்னது போலவே ஆதரவாளர்களுடன் இன்று மாலை 5 மணி அளவில் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

"கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு நீக்கினர். திமுகவுக்கு ஒரு சாதாரண தொண்டனாக பணியாற்றினேன். கருணாநிதி, அன்பழகனுக்கு தெரியாமல் என்னை திமுகவில் இருந்து நீக்கினர். எந்த ஒரு பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை.

சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம். மதுரை நமது (என்) கோட்டை, இதை யாராலும் மாற்ற முடியாது. 

திருமங்கலம் இடைத்தேர்தல் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம், உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது. திருமங்கலம் பார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு.

போஸ்டர் அடித்தியே (ஸ்டாலின்) வாருங்கள் முதல்வர் என்று., உன்னால் முதல்வர் ஆகிவிட முடியுமா? உன்னை நான் முதல்வர் ஆக விட்டுவிடுவேன்., என் ஆதரவாளர்கள் உன்னை முதல்வர் ஆக விட்டுவிடுவார்களா?

திமுகவின் வெற்றிக்காக நாம் பாடுபட்டுள்ளோம்., நம்மை பார்த்து அவர்கள் துரோகிகள் என்று சொல்லுவது கொடுமை. (குறிப்பு: நாம் என்பது அழகிரி மற்றும் அவரின் ஆதரவாளர்கள். அவர்கள் என்பது ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள்)

இங்கு பேசிய பலரும் நாம் புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று. நான் தொடங்குவேனோ தொடங்கமாட்டேனோ தெரியாது. அதற்கான அறிவிப்பை வைராவில் வெளியிடுவேன். நான் என்ன முடிவு எடுத்தாலும் நீங்கள் என்னுடன் தான் இருக்க வேண்டும்., என்னுடன் இருப்பேர்களா? (அழகிரி கேள்வி எழுப்ப., அவரின் ஆதரவாளர்கள் இருக்கிறோம் என்று ஒரே குரலை கத்தி அதிர வைத்தனர்)" இவ்வாறு முக அழகிரி பேசினார். 

(மேலும் ஒரு குறிப்பு: முக அழகிரி கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இன்று புதிய கட்சி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk Alagiri stand jan 3


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->