எச்.ராஜாவின் இல்லத்திற்கு விரைந்த மு.க.அழகிரி.! வெளியான முக்கிய காரணம்..!  - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இணையத்தில் விவாதிக்கப்படுவார். மேலும், இணையத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் எச். ராஜா.

சமீபத்தில் கூட சர்ச்சைக்குரிய கருத்துகளை தன்னுடைய அட்மின் தன்னுடைய அனுமதி இல்லாமல் பதிவிட்டு விட்டார் என்று கூறி மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

h raja

இந்நிலையில் எச்.ராஜாவின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என சந்தித்து நேரடியாக எச்.ராஜாவே சென்று திருமண பத்திரிகையை வழங்கி வருகின்றார்.

தற்பொழுது மு க அழகிரி எச்.ராஜாவின் இல்லத்திற்கு வந்து அவருடைய மகளுக்கு பரிசு கொடுத்து திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி, "திருமண நாளில் தனக்கு பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால், அன்று வர இயலாது. அதனால் தான் முன்னதாக வீட்டிற்கே வந்து வாழ்த்து தெரிவித்தேன்." என கூறியுள்ளார்.

திமுகப் பொதுக்குழு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, என்னிடம் திமுகப் பற்றி எதற்கு கேட்கிறீர்கள்? நான் திமுகவிலேயே கிடையாது.. ஆளை விடுங்கப்பா என்றுக் கூறிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk alagiri meets h raja


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->