பாஜக இல்லை.. முக்கிய கட்சியில் இணையப் போகும் மு க அழகிரி.? மகனுக்கு முக்கிய பதவி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனிடையே கருணாநிதியின் மூத்த மகன் மு க அழகிரி மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கத்தில் திமுகவினர் உள்ளனர்.

மு க அழகிரியை எப்படியாவது பாஜகவில் இணைக்க வேண்டும் என பாஜக தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, முக அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் கூறினார். அது திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர் இந்த பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது.

இருவருக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் முக அழகிரி திமுகவில் இணைய அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்படும் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk alagiri may be join dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->