திமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்க போகும் முக்கிய பிரபலம்.. ஆதரவாளர்களுடன் பிற கட்சியை நோக்கி பயணம்.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், அரசியல் கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளனர். மு க ஸ்டாலின் நாள்தோறும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். 

அதேபோல அதிமுகவில் தற்போதைய நிர்வாகிகளை  மாற்றியமைப்பதில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும் பாஜகவும் சட்டசபை தேர்தலை சந்திக்க பல யூகங்களை வகுத்து வருகிறது. 

தமிழக பாஜகவை பொறுத்தவரையில் நீண்டகாலமாக பிற கட்சிகளில் இருந்து வெளிவரும் பிரபலங்களை தங்கள் கட்சிகளை இணைத்துக் கொள்கிறார். ஆகையால் கட்சி செல்வாக்கை இழந்தவர்களின் புகலிடமாக தமிழக பாஜக மாறியுள்ளது. 

மேலும் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக அழகிரிக்கு தமிழக பாஜக வலைவீசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக திமுக தலைமை உடனும், குடும்பத்தினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த முக அழகிரி பிடி கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அழகிரிக்கு சலிப்பு தட்டி போய் விட்டதாக கூறப்படுகிறது. 

திமுக தலைமையிடம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழ்நிலையில், இனியும் பொறுப்பதில்லை என முக அழகிரி முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பிற கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk alagiri may be join bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->