அண்ணன் மீது, திடீர் பாசம்.. போன் போட்ட ஸ்டாலின்.! வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு க அழகிரி மதுரையில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தம்பி முக ஸ்டாலினுக்கும், அண்ணன் முக அழகிரிக்கும் இடையே நடைபெற்ற அதிகார போரின் காரணமாக கட்சிக்குள் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முக அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து திமுக மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் பல ஆதரவாளர்கள் இவர் பக்கம் இருந்துவந்தனர். கருணாநிதியின் மறைவுக்குப்பின் அரசியலில் இருந்து அவர் சற்று விலகியே இருந்தார்.

இதற்கிடையில், ரஜினி கட்சி தொடங்கினால் அவரது நண்பரான அழகிரிக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. மேலும், கலைஞர் திமுக என்ற தனிக்கட்சியை மு க அழகிரி தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், ஸ்டாலினும் அழகிரியும் மீண்டும் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்து மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டி திமுகவினர் பரபரப்பை ஏற்படுத்தினர்.

கடந்த சில வாரங்களாக முக அழகிரி  தனிமையில் இருந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்று கோபாலபுரத்து க்கு செய்தி வந்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து அழகிரியை தொடர்புகொண்டு ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பேச்சும் குடும்ப நலம் சார்ந்ததா அல்லது அரசியலை சார்ந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk alagiri get call from stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->