ஸ்டாலின் திட்டம் எல்லாம் டமார், டுமீல்.!! அணுகுண்டு போட்ட முக அழகிரி.!! - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், திமுக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பின், திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி அவர்கள் மீண்டும் கழகத்தில் இணைக்க அழைக்கப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கருணாநிதியின் மற்றும் ஒரு மகனும், முன்னாள் துணை முதல்வருமான மு க ஸ்டாலின், உடன்பிறப்புகளின் ஏகோபித்த ஆதரவுடன் திமுகவின் தலைவராக பதவியேற்றார். பதவி ஏற்ற பின்பு முக அழகிரி, திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்பே இல்லை என்று ஸ்டாலின் அறிவிக்க, தர்ம யுத்தத்தை தொடங்கினர் முக அழகிரி. ஆனால் அழகிரி போட்ட அனைத்து பந்துகளும் நோ பால் ஆக, அழகிரி அமைதி ஆனார்.

இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில், அழகிரிக்கு பயந்து, மதுரை மக்களவை தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஸ்டாலின் தள்ளி விட, ஸ்டாலினின் பயத்தை கண்டு அனைத்து கட்சிகளும் கைகொட்டி சிரித்தன. சிரிக்காத பின்ன. தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் (ஸ்டாலின்) மதுரையில் கால் வைக்கவே பயந்த காலங்களை தமிழகம் மறக்குமா என்ன?

இன்னும் இரண்டு நாட்களே உள்ளது வாக்கு பதிவு உள்ள நிலையில், மக்கள் அதிகம் பார்க்கும் செய்தி ஊடங்களை தனது வசத்தில் வைத்து இருக்கும் திமுக (கலைஞரின் குடும்பம்) கருத்து கணிப்பு என்ற பெயரில் வழக்கம் திமுக அமோக வெற்றி என்று தம்பட்டம் அடித்தது.

இவர்களின்  கருத்துக்கணிப்பு ஒரு உதாரணம் நம்ம ஆர் கே நகரில் 33% வாக்குகளை பெற்று திமுக வெற்றி வெறும் கூற, ஆனால், அந்த தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து மண்ணை கவ்வியது. இன்று திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், அன்று ஆதரித்தும் டெபாசி இழந்தது என்றால் பாருங்களேன்.

ஆனால், முக அழகிரி கடந்த மக்களைவை தேர்தலின் போது, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மண்ணை கவ்வும் என்று தனது கணிப்பை கூற, அச்சு அசலாக, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மண்ணை கவ்வியது. ஆக.. உண்மையில் இதுவல்லவோ கணிப்பு என்று உலக ஊடகங்களே அவரை பாராட்ட துடித்து இருக்கும். ஆனால் இந்த கணிப்பு விவகாரம் உலக ஊடங்களுக்கு தெரியாமல் போனது தான் வேதனை.

 

சரி விஷியத்திற்கு வருவோம், இந்த தேர்தலில் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை முக அழகிரி இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால், திமுக கூட்டணி 40 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்று முக அழகிரி தனது நண்பர்கள் வட்டாரத்தில் கூறியதாக வெளியான தகவலின் படி, ''தூத்துக்குடியும், திருநெல்வேலியும் தான் திமுக கூட்டணி வெற்றிபெறும். மற்ற அனைத்து தொகுதிகளிலும் மண்ண கவ்வும்'' என்று தனது நபரிடம் அடித்து கூறியுள்ளாராம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK ALAGIRI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->