அதிமுக கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்.. கூட்டணிக் கட்சித் தலைவர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு சுல்தான் பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் மாவட்ட செயலாளர் சபீக் அலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். 

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு போட்டியளித்த தமிமுன் அன்சாரி, தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு தயார் படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தகைய அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும், கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அடுத்த மாதம் இறுதியில் தலைமை செயற்குழு கூடி முடிவு செய்யும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில்  நானும் எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதன் விளைவாகவே சிறையிலிருந்து பரோலில் வெளியே செல்ல முடிந்தது. 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அதன்பிறகும் 7 பேரை விடுதலை செய்யாமல் கவர்னர் காலம் தாழ்த்துவது அநீதியாகும். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இதுபற்றி தமிழக முதலமைச்சர் பேசவேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே கூட்டணியிலிருந்து வெளியேறி விடும். கடந்த இரு மாதங்களாக அதிமுக பாஜக இடையே பிணக்கு இருந்தது போல் காணப்பட்டு தற்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் சமூகநீதியின் தாயாகும். இங்கு வட இந்திய கலாச்சாரத்தைப் திணிக்க முயன்றால் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு அதிமுக தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டும். இது தமிழக நலனுக்கு நல்லது அல்ல. தேர்தலில் நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டி, கூட்டணி உள்ளிட்ட விவகாரத்தை கட்சியின் தலைமைச் செயற்குழுவில் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mjk party left admk alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->