#BREAKING | மேலும் ஒரு திமுக அமைச்சருக்கு கொரோனா.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரேநாளில் திமுக அமைச்சர்கள் இருவருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி இன்று பங்கேற்பதாக இருந்த நிலையில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதால் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MinisterRamachandran Covid19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->