சென்னையில் தண்ணீர் பஞ்சம் இல்லை... அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமங்களை நோக்கி சென்னை மக்கள் படை எடுக்கின்றனர். 

தண்ணீர் பிச்சனையால் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாதது மற்றும் பெய்த மழையை சேமித்து வைக்காதுதான்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி குடிநீர் வழங்கல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி கலந்து கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் மணி செய்திகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இது உண்மை இல்லை. சென்னையில் எந்த ஐடி நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லவில்லை. 

ஹோட்டல் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை. குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sp velumani meeting in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->