வாக்காளர்களுடன், ஒயிலாட்டம் ஆடிய அதிமுக அமைச்சர்! வைரல் வீடியோ!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் அங்கு முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள், அங்குள்ள மக்களுடன் சேர்ந்து நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் விக்கிரவாண்டியை அடுத்த பனமலைப்பேட்டை பகுதிக்கு வாக்கு சேகரிப்புக்காக வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,  பம்பை இசைக்கு ஏற்ப ஒயிலாட்டம் ஆடி அசத்தினார். அவருடன் சேர்ந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நடனமாடினர். இந்த வீடியோவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆவது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sp velumani dance video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->