அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்த திமுக முக்கிய நிர்வாகி மரணம்...திமுகவினரை நெகிழ வைத்த செகோட்டையன்..! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் ஜி.பி. வெங்கிடு(86), இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். 

இவர் கோபியில் தினசரி மார்க்கெட் அருகே பெட்டிக்கடை வைத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற பின் தனது எம்.எல்.ஏ பதவிக்காலம் முடிந்த பின்னும் பெட்டிக்கடையில்  வியாபாரம் செய்து வந்தார். கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க சார்பில் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னனர் உடல்நிலை பாதிப்புக்குள்ளானார். 

இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  ஜி.பி.வெங்கிடு அனுமதிப்பட்டார். அங்கு அவருக்கு நடைபெற்ற பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜி.பி.வெங்கிடுவின் உயிரிழப்பு திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கிடு இல்லத்திற்கு நேரில் சென்ற  அமைச்சர் செங்கோட்டையன் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் வெங்கிடு எனவும், பெரியார் கொள்கையில் தீவிர பற்றுடையவர் எனவும் பெரியார் திடலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்று செங்கோட்டையன் பேசினார். அமைச்சர் செங்கோட்டையனின் இந்த செயல் திமுக முன்னாள் எம்.எல்.ஏ வெங்கிடு குடும்பத்தினரையும், ஈரோடு மாவட்ட திமுகவினரை நெகிழ வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister sengotaiyan mourning to dmk ex mla


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->