அதிமுகவை கருணாநிதியாலேயே அழிக்க முடியவில்லை.! கமல் கத்துக்குட்டி தான்.!! கமலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தூத்துக்குடியில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, இந்துக்களை தீவிரவாதி என்று கூறும் கமல், இதைத்தொடர்ந்து தான் கூறியது சரித்திர உண்மை என்றும் கூறியுள்ளார். அவர் சரித்திர உண்மை என்று கூறி தரித்திரத்தை தான் விலைக்கு வாங்குகிறார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றால் அதற்கு முன்னால் இந்தியாவில் எவ்வளவு கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதெல்லாம் வரலாற்றில் மறைக்கப்படவேண்டிய, மாணிக்கப்படவேண்டிய சம்பவங்கள். அதையெல்லாம் இப்போது பேசினால் மத நல்லிணக்கம் கெட்டுவிடும். 

அரவக்குறிச்சியில் அவர் பேசியது அங்குள்ள சிறுபான்மை மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக தான். ஆனால், அவர் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காண்பித்ததை மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

அதிமுகவை ராஜ தந்திரி என பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி அழிந்து போய்விடும் என்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில் எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கமல் கத்துக்குட்டி தான். கமல், ஒரு கருத்தை கூறிவிட்டால் பெரிய ஆளாகிவிட முடியாது. கமல் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற போவதில்லை என்று கூறினார்.

English Summary

minister rajendra balaji says kamal


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal