தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! அமைச்சர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த இலக்கியப் பட்டறையின் இரண்டாவது நாள் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். அவர் தமிழ் வாழ்க்கை பணி என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியவை, இணையதளம் மூலம் தகவல் பரிமாற்றம் தொடங்கிய பிறகு தாய்மொழி பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது. 

மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001 முதல் 2011 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலங்களில் தமிழ் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 322 சதவீதம் அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். 

3 ஆயிரம் மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக யுனெஸ்கோ ஆய்வில் தெரிவித்துள்ளனர். மொழியின் வளர்ச்சிக்கு புதிய சொற்களை அவசியம். உலக அளவில் எந்த மொழியாக இருந்தாலும் அதற்கு இணையாக ஆங்கிலச் சொல்லும் உடனடியாக அறிமுகமாகிறது. 

தமிழ் மொழியில் புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியாக சொற்குவைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படிப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைகள் வேலைவாய்ப்பு காத்திருக்கின்றனர். 

இதற்காக திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். எந்த துறையை சேர்ந்தாலும், அதில் முழுமையாக அறிவை வளர்த்தால், வேலைவாய்ப்புக்கான பண்பு, இவை தான் வாழ்க்கை பணியை பெறுவதற்கு அடிப்படையாகும் எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister pandiarajan says tamil educators


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->