முரசொலி நிலம் பஞ்சமி நிலமா? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை 20.11.19 : முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணையும் போது தயிர் ஆகாது. இதுதான் ரஜினி, கமல் இணைப்பு என்று மயிலாடுதுறையில் அளித்த பேட்டியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் பிரவின் பி. நாயர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 1017 பயனாளிகளுக்கு ரூ.6.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்
கமலும் ரஜினியும் இணைவது குறித்த கேள்விக்கு பாலும் மோரும் இணைந்தால் தயிராகும். இது முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணையும் போது தயிர் ஆகாது. இதுதான் அவர்களுடைய இணைப்பு, என்று விமர்சனம் செய்தார். 

முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலமா என்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது நீதிமன்றத்தின் மூலம் உண்மை வெளிவரும். உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகமாக மேயர், நகரமன்ற தலைவர்கள் தேர்ந்தெடுப்பதால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக தலைவர்கள் கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார். 

அதிமுக எப்பொழுதுமே தேர்தலை சந்திக்க தயார் எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்தால் அவருடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என்றார்.
இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : மணி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister OS Maniyan in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->