உலகிலேயே மிக குறைந்த விலையில் பால் விற்க்கும் நிறுவனம் ஆவின்! பாஜகவினருக்கு தெரியுமா? அமைச்சர் பதிலடி!
minister mano thangaraj aavin
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விடுத்துள்ள அறிக்கையில், "உலகிலேயே மிக குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்க்கும் நிறுவனம் ஆவின் என்பது பாஜகவினருக்கு தெரியுமா?
ஆவின் லாபம் ஈட்டினால் அது பெருமுதலாளிகளுக்கு செல்லாது, மாறாக வறுமையில் வாழும் ஏழை விவசாயிகளுக்கு ஊக்க தொகை மற்றும் போனஸாக திரும்ப செல்லும்.
பால் உற்பத்தி செலவு பாஜக அரசின் GST வரியால் உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகளின் வலி தெரியாமல் பேசுவது பாஜகவினரின் கார்பரேட் மனநிலையை காட்டுகிறது.
இதே கேள்வியை கார்பரேட் நிறுவனங்களை பார்தது கேட்க தைரியம் உள்ளதா?
ஆவின், விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனம். ஆவினுக்கு எதிராக பேசுவது விவசாயிகளுக்கு எதிரான செயல் எனபதை புரிந்து கோள்ளுங்கள்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு முதல் முறையாக லிட்டர் ஒன்றுக்கு ₹3 ஊக்கத்தொகை கொடுத்து பேருதவி புரிந்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்களால் கால் அணாவிற்க்கான உதவி விவசாயிகளுக்கு செய்ய முடிந்ததா? உப்பு முதல் கற்பூரம் வரை வரி விதித்ததை திவிர ஏழை மக்களுக்கு வேறு என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
minister mano thangaraj aavin