அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு தேவையான உதவியை செய்ய தமிழக அரசு, சுகாதாரத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக உயர்ந்துள்ளது. 2,38,638 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 4,690 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். களப்பணியாற்றிய பலருக்கும் கொரோனா அடுத்தடுத்து உறுதியாகி வந்தது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியை சார்ந்த பலருக்கும் கொரோனா உறுதியாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டது.

இந்தநிலையில், தற்போது மதுரை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சரவணனுக்கு பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலகண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister kamalakannan corona positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->