#Breaking || இது சீமானுக்கு கேடாய் முடிய போகிறது., சற்றுமுன் வெளியான பகிரங்க எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் விவகாரம் அல்ல. மக்களுக்காக ஆற்றும் தொன்றே அரசியல். தேர்தல் களப்பணிகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிறப்பாக நடந்து வருகிறது. நாங்கள் ஒற்றைக்கட்சி ஆட்சிமுறையை எதிர்க்கிறோம்.

எம்.ஜி.ஆரை பொறுத்த வரையில், இலங்கையில் தமிழருக்கான போரில் உறுதுணையாக இருந்தார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் - கருணாநிதி தமிழகத்திற்கு செய்தது என்ன?. அன்றைய காலத்திலேயே தமிழகத்திற்கான உரிமையை விட்டுக்கொடுத்து வந்தார்கள் " என்று சீமான் தெரிவித்தார். 

இந்நிலையில், எம்ஜிஆரை விமர்சிப்பது சீமானுக்கு கேடாய் முடியும் என்று, சீமானுக்கு பதில் கொடுக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை: கோடம்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, "எம்ஜிஆரை விமர்சிப்பது சீமானுக்கு கேடாய் முடியும். எம்ஜிஆரை விமர்சிப்பதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சீமான் தற்போது யாருக்கு B டீமாக செயல்பட்டு வருகிறார் என்று தெரியவில்லை. அதிமுக மீது என்ன கோபம் என்றும் தெரியவில்லை. நேற்று அவரது கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த வெறுப்பை எங்கள் மீது காட்டுகிறார் என்று நினைக்கிறன்" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jeyakumar reply to seeman mgr statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->