திண்டுக்கல் சீனிவாசனுக்கு 'எச்சரிக்கை விடுத்த' ஜெயக்குமார்..அதிமுகவில் புதிய சர்ச்சை உருவானது.! - Seithipunal
Seithipunal


அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாகவும் கட்சி வளர்ச்சி பணி, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் விவாதிக்கப்பட்டது.. 

இந்த கூட்டம் நிறைவுபெற்றதும் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அக்டோபர் 7 ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார். 

இதனையடுத்து மறுநாளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அரசு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, ஓபிஎஸ் அரசு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தனது ஆதரவாளர்களான கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன், நந்தம் விசுவநாதன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எவ்விதமான குழப்பமும் இல்லை என்று கூறி இருந்தார்.

இந்தநிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, " கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்றுதான். அமைச்சர்களும், தொண்டர்களும் அதிமுகவில் சர்ச்சை உருவாவதற்கு இடம் அளிக்கக்கூடாது என்றார்.

மேலும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லை என அவர் தெரிவித்தார். திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாகவே இது பார்க்கப்படுகிறது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar warning to minister srinivasan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->