சசிகலா விடுதலை மற்றும் அதிமுக, அமமுக இணைப்பு குறித்து அதிமுகவின் முக்கிய புள்ளி பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்த தொகையை செலுத்தினால் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சம் அபராதத் தொகையை சமீபத்தில் பெங்களுரு சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பினர் செலுத்தினர். இதையடுத்து, சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேருக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தண்டனை காலம் முடிவடைகிறது. சசிகலாவிற்கு முன்பாக சுதாகரன் விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஜனவரி 27ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார், தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மந்தைவெளியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சசிகலா விடுதலை குறித்தும், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசசிகலா சிறையில் இருந்து வந்தாலும், அவருடன் அதிமுக இணையாது. மேலும் அமமுகவும், அதிமுகவும் ஒன்றாக இணையாது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jayakumar press meet on dec 30


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->