டாக்டர் ராமதாசின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு! கூட்டணி குறித்தும் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


மருத்துவ கலந்தாய்வு :

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவ கலந்தாய்வு நடைபெறும். 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் ஒப்புதல் அளிக்க ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு :

அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பது தான் அதிமுக அரசின் நோக்கம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு நிச்சயமாக நிறைவேற்றும். அதே சமயம் திமுகவின் போராட்டத்தினால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என பெயரை உருவாக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் எனவும் சாடியுள்ளார். 

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு :

தொடர்ந்து பேசிய அமைச்சரிடம், டாக்டர் ராமதாஸின் ட்வீட்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே. அவரவர் கட்சியை வளர்க்க அவரவர் கருத்துகளை சொல்லத்தான் செய்வார்கள். இது ஜனநாயக நாடு, அவரவர்களுக்கு கருத்துரிமை உள்ளது. இதன் காரணமாக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை" என கூறியுள்ளார். 

"வன்னியர் சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாசின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார். மேலும் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் அதிமுக அரசு செய்து வருகிறது என்பதனை எங்களின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் தெரிய வரும்" என பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jayakumar press meet about Dr Ramadoss twits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->