திமுகவின் கோரிக்கையை நிராகரித்த வைகோ! அதிர்ச்சியில் மு க ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்த மற்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக விரும்பியது. 

ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தம்முடைய  ஏணி சின்னதிலும், அதனை தொடர்ந்து சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியில்  பானை சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்தது. மேலும் ஒரு தொகுதி மட்டும் வழங்கப்பட்ட வைகோ கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தற்போது தேர்தல் ஆணையம் தங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கீடு செய்கிறதோ, அதே சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். 

இதனால் மதிமுக போட்டியிடும் ஈரோடு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது. ஏற்கனவே 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக தங்களுடைய வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதற்காக  பெரம்பலூரில் போட்டியிடும் ஐஜேகே நாமக்கல் போட்டியிடும் கொமதேக கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளது. அதேபோல விசிக கட்சியை விழுப்புரம் தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்த நிலையில் 24 தொகுதியாக ஈரோடு  இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் வைகோ அதற்கு முற்றுப்புள்ளி வைத்து  திமுகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளார். 

இரண்டு எம்பிக்கள் இருந்தால் மட்டுமே அங்கிகாரம் என்ற நிலையில் போட்டியிடும் ஒரே தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் என்ன முக ஸ்டாலின் கூறி வந்தார், ஆனால் அவருடைய எண்ணத்தில் வைகோ கரியை பூசிவிட்டார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk contested separate symbol in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->