திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும்,  இந்தியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும் மதிமுகவிற்கு 1 மக்களைவை, 1 மாநிலங்களவை தொகுதியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. திமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக போட்டிடப்போகும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகளின் பட்டியலை நேற்று மதியம் 1 மணிக்கு வெளியிட்டார். அந்த பட்டியல் பின்வருமாறு,

திமுக தொகுதிகள்:

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பொள்ளாட்சி, நீலகிரி, வேலூர், அரக்கோணம், சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர்,  தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, கள்ளகுறிச்சி

காங்கிரஸ் தொகுதிகள்:

புதுச்சேரி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருவள்ளூர், கரூர், ஆரணி, விருதுநகர், கிருஷ்ணகிரி, திருச்சி

விசிக தொகுதிகள் : சிதம்பரம், விழுப்புரம் 

மார்க்சிஸ்ட் தொகுதிகள் : மதுரை, கோவை

இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிகள் : நாகப்பட்டினம், திருப்பூர்  

முஸ்லீம் லீக் கட்சி தொகுதி : இராமநாதபுரம் 

ஐ.ஜே.கே தொகுதி : பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி : நாமக்கல் 

மதிமுக : ஈரோடு 

இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் படி,

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி :

இராமநாதபுரம் - நவாஸ் கனி

மார்க்சிஸ்ட்  கம்யூ :

மதுரை - சு.வெங்கடேசன்
கோவை - பி.ஆர்.நடராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் :

நாகப்பட்டினம் - செல்வராசு
திருப்பூர் - சுப்புராயன்

மதிமுக : 

ஈரோடு - அ. கணேசமூர்த்தி

English Summary

mdmk candidate list


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal