தி.மு.க. உடன் கூட்டணி பேச்சு வார்த்தையைத் துவங்கியது ம.தி.மு.க.  எத்தனை சீட் தெரியுமா? - Seithipunal
Seithipunal


 

வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான, கூட்டணியை, ஆளும் அதிமுக. முடித்து விட்டது. தொகுதிப் பங்கீட்டிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதே போல், தற்போது தி.மு.க.விலும் கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சி, 10 சீட்டுகளை பெற்று உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற சிறு சிறு கட்சிகள் எல்லாம், ஒரு சீட்டாவது கிடைக்குமா? என்று அதிமுக மற்றும் திமுக-விற்கு துாது விட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட சிறு கட்சிகள் எல்லாம், யார் சீட் தருவார்கள்? என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது, தி.மு.க.வுடன், ம.தி.மு.க. தலைவர், வை.கோ. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் தேர்தலில் எல்லாம், திமுகவுடன் எந்தக் கூட்டணிக்கும் தயாராக இல்லாமல் இருந்த மதிமுக, தற்போது, திமுக உடன் கூட்டணி அமைக்க விரும்பி உள்ளது.

ஆனால், வைகோ, கேட்கும் அளவிற்கு, சீட்டுகளைத் தர இயலவில்லை, என்று அறிவித்தார் மு.க. ஸ்டாலின். இறுதியாக, மதிமுக-விற்கு, 3 சீட்டுகள் தர தி.மு.க. ஒப்புக் கொண்டதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வை.கோ. திருப்தி அடைந்துள்ளதாகவும், தெரிவிக்கப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mdmk. aliance with D.M.k.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->