மயிலாடுதுறை, அரியலூரில்., சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு சிலை வைக்கப்படும். ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு சிலை வைக்கப்படும்.

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் சிலை அமைக்கப்படும். 

நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும். பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்கப்படும்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் சிலை அமைக்கப்படும். தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும். சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும்.

கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.

மேலும், பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கருணாநிதி பெயரில் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும்." என்று அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai ariyalur statue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->