திமுக மகளிரணி அமைப்பாளரிடம் கைவைத்த திமுக உடன்பிறப்பு.! பரபரப்பு புகார்.! கண்டுக்கொள்ளாத ம.செ., கண்டுக்குமா தலைமை.?! - Seithipunal
Seithipunal


திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவரிடம், திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஆர் எஸ் ஸ்ரீதர் என்பவர் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு, அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். 

மயிலாடுதுறையில் பார் ஏலம் எடுத்து தருவதாக கூறி, மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக திமுக பிரமுகர் ஆர்எஸ் ஸ்ரீதர் மீது, திமுகவின் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி என்பவர், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அவரின் அந்த புகார் மனுவில், "திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவராக இருந்து வருபவர் ஆர்எஸ் ஸ்ரீதர். இவர் மயிலாடுதுறை உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் மதுபான கூடத்தை (பார்)  ஏலம் எடுத்து தருவதாக கூறி, என்னிடம் மூன்று லட்சம் ரூபாய் கேட்டார்.

அதன்படி, ஸ்ரீதரன் உதவியாளர் செந்தில் என்பவருக்கு கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி மணல்மேடு, நடுத்திட்டு கிராமத்தில் உள்ள எனது வீட்டில் வைத்து மூன்று லட்சம் ரூபாயை வாங்கி சென்றார். நான் இதுகுறித்து பலமுறை தொடர்ந்து கேட்டபின், கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி பணத்தை திருப்பித் தர முடியாது என்று தெரிவித்து,

என்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து திமுகவின் மாவட்ட செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகளிடம் நான் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை அடுத்து நான் காவல்துறையினரை அணுகி உள்ளேன். இந்த விவகாரத்தில் எனக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்" என்று அந்த மனுவில் சாந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

சாந்தியின் புகார் மனு குறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கையில், இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MAYILADURAI dmk party women shanthi report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->