இரண்டு துணை முதல்வர்கள்.! வெளியான பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனால் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.  இதில் அடுத்த அமைச்சராக நிதிஷ் குமார் தொடர்வது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டுவிட்டது. இன்று மதியம் நிதிஷ் குமார் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் முத்த-அமைச்சராக 7-வது முறையாகவும், தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல்-அமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்க்க உள்ளார். இந்நிலையில், பிகாரில் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "2 துணை முதல்வர்கள் முடிவு குறித்து பாஜக ஆலோசனை செய்து வருகிறது. கட்சியின் வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம். இந்த சூழ்நிலையில் இதுகுறித்து என்னால் எதுவும் கருத்து தெரிவிக்க இயலாது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May Be Two Deputy CM in Bihar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->