தமிழகத்தில் குடிகாரர் போட்டியிட போகும் தொகுதி.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


நாட்டில் 17 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டில் உள்ள சிறிய கட்சிகள், அமைப்புகள், தேசியக் கட்சிகள் வரை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து வியூகங்களை வகுத்து வருகின்றன.

மேலும், யார் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கூட்டணி வைக்கும் கட்சிகள் இடையே தொகுதிப்பங்கீடு குறித்து குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில், தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது வருகிறது. இந்த முறை எப்படியேனும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் ஒரு பக்கம் செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தயாராகி வருகிறது. தற்போதுவரை அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், என்ஆர் காங்கிரஸ், ஆகிய கட்சிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதியாக உள்ளது. மேலும், தினகரனின் அமமுக, நாம் தமிழர், விஜயகாந்தின் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சாதி மதம் கடந்து அதிக எண்ணிக்கையில் உள்ள மது குடிப்போர் அவர்களுக்கு என்று ஒரு சங்கமும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சங்கத்தின் பெயர் மது குடிப்போர் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. மேலும், அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்தும், மது குடிப்பவர்களுக்கு நிகழும் அநியாயங்கள், மூடப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் என்று இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மது குடிப்போர் சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ''மது இல்லாமல் அரசியல் கூட்டத்தை எவராலும் இங்கு கூட்ட முடியாது. தமிழகம் முழுவதும் நாங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது உறுதி. இதில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்'' என்று பரபரப்பாக அறிவித்துள்ளார்.

ஒரு வேளை மது குடிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து இவரை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நமிபிக்கையில் களத்தில் இறங்குகிறார் போல.. என்று மக்கள் பேசி வருகின்றனர். அதே சமயத்தில் மது குடிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து இவரை வெற்றி பெற வைத்து விடுவார்களோ என்ற அரசியல் கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டாலும் தப்பில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MATHUKUDIPOR SANKAM IN PARLIAMENT ELECTION


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->