இந்து கோவிலின் சிலைகளை கொள்ளையடித்த இப்ராஹிம்.! மன்னார்குடியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அருகே திருபட்டினத்திலுள்ள ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் சிலைகளை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இப்ராஹிம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தில் அமைந்துள்ள ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில், கடந்த 2007ஆம் ஆண்டு சாமி சிலைகள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த இந்திரஜித் என்ற இப்ராஹிம் (வயது 46) என்பவனையும், அவருடைய நண்பர்களான நேரு, செல்வம் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து அவர்களில் இப்ராஹிம் மட்டும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானான்.  கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மூன்று பேருக்கும் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதனையடுத்து குற்றவாளிகள் நேரு, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதே சமயத்தில் இப்ராகிம் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தான்.

இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் இப்ராகிமை உடனடியாக கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனையடுத்து காரைக்கால் சிறப்பு அதிரடி படை பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது குற்றவாளி இப்ராஹிம் மன்னார்குடியில் எந்த பதற்றமும் இல்லாமல் சுதந்திரமாக இரும்பு கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் மன்னார்குடி சென்று இப்ராஹிமை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவனை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mannarkudi ibrahim arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->