தமிழகத்தில் இந்தி திணிக்க முயற்சி.. தமிழகத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய பிற மாநில முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் நடந்த பேரணியின் போது வன்முறை ஏற்பட்டு, சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் நிலை உடைக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதிய சிலையை எடுத்து வரப்பட்ட பிரமாண்ட ஊர்வலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள்,  சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலைக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு மம்தா பேசியவை, தமிழ்நாட்டில் மிகச் சிலரின் தேவைக்கான இந்தி மொழியை ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு இந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதில் இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி கட்டாயமாகக் கற்க வேண்டும் என அறிவித்திருந்தனர். இதற்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சை கிளம்பியது அதன் பின்பு அந்த வரைவு அறிக்கையை திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamta says hindi education


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->