எதிர்பாராத நேரத்தில் அசத்தலாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


79 தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், 50 பெண்கள்,  42 இஸ்லாமியர்கள், 17 பழங்குடியினருக்கு தேர்தலில் போட்டியிட மம்தா பானர்ஜி வாய்ப்பு அளித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கம் மாநிலத்தில், 30 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக மார்ச் மாதம் 27 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1 ஆம் தேதி 30 தொகுதிகளுக்கும் என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றியை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 291 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை பட்டியலை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மேற்கு வங்கத்தின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த வேட்பாளர் பட்டியலின் மூலமாக 79 தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், 50 பெண்கள்,  42 இஸ்லாமியர்கள், 17 பழங்குடியினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது உறுதியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee Announce 2021 West Bengal Election Consultancy List 5 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->