மகாராஷ்டிரா அரசியலில் புதிய ட்விஸ்ட்! தேர்தலில் நிற்காதவர் முதலமைச்சர் ஆகிறார்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்தும், தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது. பாஜக சிவசேனா  கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே முதலமைச்சர் யார் என்பதில் பிரச்சினை ஏற்பட 32 வருட கூட்டணி முறிந்தது. 

இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைக்க சிவசேனா முடிவு செய்த நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்து வந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தை ஒருமனதாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படியே காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க மும்பையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏவாக ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால்தாக்கரே குடும்பத்தில் முதல் முறையாக உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தான் தேர்தலில் போட்டியிட்டவர் அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra political game may be end


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->