நீண்ட பரபரப்புக்கு மத்தியில் கூடிய மகாராஷ்டிரா சட்டசபை எல்லாம் முடிந்தது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து சில மணி நேரங்களில் முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிசும், துணை முதலமைச்சர் அஜித் பவாரும் தங்களது பதவிகளை நேற்று பிற்பகல் ராஜினாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நேற்றிரவே நியமனம் செய்யப்பட்டு. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதலமைச்சராக க உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நேற்றிரவு 8.30 மணிக்கு நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சிறப்பு சட்டசபை கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்க சட்டப்பேரவைக்கு வருகைதத்தனர். சட்டப்பேரவைக்கு வந்த தேவேந்திர பட்னாவிசை, சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கைகுலுக்கி வரவேற்றார். 

இதையடுத்து, பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 உள்ளிட்ட 288 மகாராஷ்டிரா எம்.எல்.ஏக்களும் பதவியேற்று கொண்டனர்.

எம்.எல்.ஏக்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.  உத்தவ் தாக்கரே நாளை மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்ற உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharashtra mla total mla inauguration in assembly


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->