கட்சி மாறிய நேரத்தில் கைமாறிய தொகுதி.! மஹாராஷ்டிராவில் ருசிகர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பாஜக வேட்பாளர் உதயன்ராஜே போசேல மகாராஷ்டிர மாநிலம் சதாரா மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட குறைந்த வாக்குகளைப் பெற்று பின்தங்கி இருக்கின்றார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சத்ரபதி உதயன்ராஜே போசலே மகாராஷ்டிர மாநிலம் சதாரா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர. இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவில் இணைந்தார். 

இதனை தொடர்ந்து, சதாரா மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், உதயன்ராஜே போசலே மீண்டும் போட்டியிட்டார். இருப்பினும் அவர் போட்டியிட்டது பாஜக சார்பில். 

இந்நிலையில், இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகின்றது. தற்போதைய நிலவரப்படி பாஜக இந்த தொகுதியில் பின்னடைவையே சந்தித்து இருக்கின்றது 

பாஜக சார்பில் போட்டியிட்ட போசலே 1,27,000 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். ஆனால், தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தாதா சாகேப் பாட்டீல் 1,43,150 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharashtra election result suspence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->