எட்டு வருடங்களுக்கு முன்பே ஜெயலலிதா செய்துவிட்டார்! ஸ்டாலினை இடத்தினை காலி பண்ண சொல்லும் அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


கடந்த ஒருவார காலமாகவே தமிழ்நாட்டில் மொழி அரசியலானது மிகப் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டு வருகிறது. கடந்தவாரம் ஐநா சபைக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையில் 3000 வருடங்களுக்கு முன்பே உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் கவிஞர் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எழுதியுள்ளார் என்பதை கூறி பேசியிருந்தார். 

இதனை அடுத்து தமிழ்நாட்டில் மொழி அரசியலானது ஆரம்பமானது. இதையடுத்து பிரதமராக மீண்டும் பதவியேற்ற நரேந்திர மோடி கடந்த 30ஆம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பொழுது, நான் தமிழ் மொழியை உலக அளவில் புகழ்ந்து பேசியுள்ளேன். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என அவர் தமிழ் மொழியை பற்றி மிகவும் பெருமையாக பேசி விட்டு சென்று விட்டார். 

இந்த நிலையில் இதனை கையிலெடுத்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு க ஸ்டாலின் தமிழ் மொழி தொன்மையான மொழி என்பதனை உண்மையாகவே அவர் கூறியிருந்தால் தமிழை  இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எப்பொழுதெல்லாம் திமுக சரிந்து கீழே விழுகிறதோ அப்போதெல்லாம் அவர்களுக்கு மொழி என்பது தேவைப்படுகிறது. அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் விளம்பரப்படுத்திக் கொள்ள மொழி என்பது ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். உண்மையான மொழி மீது பற்றும் அக்கறையும் இல்லை என பதிலடி கொடுத்திருந்தார். 

இந்த நிலையில் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே சென்ற தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் எனவும், மேலும் கடந்த வாரம் நான் டெல்லி சென்று இருந்த பொழுது தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

அதாவது நாங்கள் அரசியலுக்காக தமிழ் மொழியை பேசவில்லை, தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறோம் என திமுகவிற்கு சொல்லாமல் மாஃபா பாண்டியராஜன் சொல்லியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mafoi pandiyarajan replies to dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->