"ஐகோர்டாவது மயிராவது" என எச்.ராஜா பேசிய வழக்கில்.! அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி விழா மேடைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற அறிவுறுத்தளின் பேரில் காவல்துறை அனுமதி மறுத்தது.

அனுமதியளிக்காதற்கு கண்டனம் தெரிவித்த எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தை அவதூறாகப் பேசியதாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் தானாக விசாரணைக்கு ஏற்றது. அப்போது எச்.ராஜா இந்த வழக்கில் மன்னிப்பு கோரியதால் வரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், திருமயம் காவல் நிலைய வழக்கில் விசாரணையை முடித்து எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதே தவறை எச்.ராஜா தவிர்த்து வேறு யாராவது செய்திருந்தால் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்றும், எச்.ராஜா மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்பதால் காவல்துறை அவரை கைது செய்ய தயங்குவதாகவும் திராவிடர் கழகம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை நடத்திய நீதிபதி, இன்னும் 2 மாதங்களில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய திருமயம் காவல் நிலைய ய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai highcourt order to take action for hraja speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->