45 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் - மத்திய அரசு உறுதி!! - Seithipunal
Seithipunal


கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதியதாக 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். 

அதில் தமிழகம், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்கள் இடம்பெற்றன. டெல்லியில் உள்ளது போன்று அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) தமிழகத்தில் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு 5 இடங்களை ஒதுக்கியது. கடந்த 31.10.2014 அன்று மத்திய அரசுக்கு தமிழகத்தால் தேர்வு செய்யப்பட்ட இடங்களின் பட்டியலை அனுப்பியது. பெருந்துறை (ஈரோடு), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), தோப்பூர் (மதுரை), செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) ஆகிய இடங்கள் தமிழக அரசால் ஒதுக்கிய இடங்களாகும். இந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மதுரையில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, கோன புதுப்பட்டி பகுதியில் தோப்பூர் என்ற இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கினாலும், நிதி ஒதுக்குவது, எப்போது அடிக்கல் நாட்டப்படும் என்பது குறித்து எந்த அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான திட்ட மதிப்பீடு மத்திய நிதி குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதிக்குழு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற 45 மாதத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIMS Hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->