மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்கி முதல்வர் அதிரடி உத்தரவு.! பினராயி, மம்தா, உத்தவ் வரிசையில் இணைந்த முதல்வர்.! - Seithipunal
Seithipunal


லாட்டரி சீட்டு விற்பனை : 'ஆயிரம் பேரை காவு வாங்கி, 10 பேரை வாழ வைக்கும்' என்ற சொல்லாடல் தமிழகத்தில் உண்டு. அதற்க்கு பொருத்தமான ஒரு சூதாட்டம் தான் இந்த லாட்டரி சீட்டு பரிசு திட்டம். 

பத்தாயிரம், ஒரு லட்சம், 10 லட்சம், ஒரு கோடி, 10 கோடி, கார், தங்கம் உள்ளிட்ட பரிசுகளை அறிவித்து, சுமார் ஒரு லட்சம் லாட்டரி சீட்டுகள் அடிக்கப்படும். இதில், குறிப்பிட்ட ஒரு 10 முதல் 100 எண்களை அறிவித்து, அந்த எண்களுக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

அந்த 10 முதல் 100 எண்களுக்கு போட்டிபோட ஒரு லட்சம் பேர் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 99 ஆயிரத்து 900 பேர் ஏமார்ந்து., 100 பேர் அதிர்ஷ்டம் என்ற பெயரில் ஒரு சூதாட்ட செயல்தான் இந்த லாட்டரி சீட்டு விற்பனை.

இந்த சூதாட்டம் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு முழுவதுமாக தடை விதித்து சட்டம் இயற்றினார். அன்று முதல் இன்றுவரை தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை இல்லை. 

தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், லாட்டரி சீட்டு விற்பனை செய்ய மாட்டோம். அனுமதி வழங்க மாட்டோம் என்று திமுக தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் கேரள மாநிலம், மேற்கு வங்க மாநிலம், பஞ்சாப் மாநிலம், மகாராஷ்டிரா மாநிலம், கோவா மாநிலம் ஆகிய மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநில வரி வருவாயைப் பெருக்கும் வகையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி வழங்கி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சூதாட்ட லாட்டரி சீட்டு விற்பனையை நாட்டின் சிறந்த முதல்வர்கள் என்று சொல்லப்படும் முதலமைச்சர்கள் பினராய் விஜயன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, பஞ்சாப் முதல்வர் நடத்திவரும் நிலையில், அவர்களின் வரிசையில் தற்போது சிவராஜ் சிங் சவுகான் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh lottery


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->