பிரதமர் மோடிக்கு.. மு.க.ஸ்டாலின் கொடுத்த அட்டகாசமான நினைவு பரிசு.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகில் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி தனி விமானத்தின் மூலம் பெங்களூருவில் இருந்து மதுரை வந்து இறங்கினார்.அவருக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாகத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு வெளியில் நிறைய பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றார்கள். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் சென்ற அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் வரவேற்றனர். 

அப்பொழுது மோடிக்கு நினைவு பரிசாக மு. க. ஸ்டாலின் பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல்களை பரிசாக கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு கார் மூலமாக மோடி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

M k Stalin Gift Ponniyin Selvan novel for Pm Modi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->