பெற்றோரின் அருமை உணர்ந்து காதலைவிட்ட காதலி.! உயிரை விட்ட காதலன்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், தான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்ற விரக்தியில், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் : கொழிஞ்சாம்பாறை மேட்டை சேர்ந்தவர் கோபாலசாமி. இவரின் மகன் செல்வராஜ். இவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.

இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோர்க்கு தெரியவரவே, இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் அருமையை உணர்ந்த அந்த இளம்பெண் உடனடியாக காதலை கைவிட்டு, காதலனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். காதலியை தன்னிடமிருந்து பெண்ணின் பெற்றோர்கள் பிரித்த காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் செல்வராஜ் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு அவரின் பெற்றோர்கள் வேறோரிடத்தில் மணமகன் பார்த்து கடந்த மாதம் திருமணத்தை செய்து வைத்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளான செல்வராஜ், தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அருகில் உள்ள கடைக்கு சென்று விஷத்தை வாங்கி, பின்னர் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சிபுரம் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அமர்ந்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மயங்கி விழுந்து கிடந்த செல்வராஜ் பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் செல்வராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lover dead for break up


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->