உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு?! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆணையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிதாக வார்டு வரையறை செய்யப்பட்டு,  இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு  வெள்ளியிட்டுள்ள அரசாணையில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. பழங்குடியானர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையாக வைத்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சியில், மொத்தம் உள்ள 200 மாநகராட்சி வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகள் உள்ளன. ஆண்களுக்கு 32 வார்டுகளும், பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோலவே சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கும் 30 வார்டுகள் ஆண்களுக்கும் சரிசமமாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local body election reservation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->