விடாப்பிடியாக நிற்கும் அதிமுக.! விட்டு பிடிக்க நினைக்கும் திமுக.! காரணம் இதோ.!  - Seithipunal
Seithipunal


திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக விடாபிடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தீவிரம் காட்டி வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பலரும் குழம்பி போய் இருக்கின்றனர். உண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் அதிமுக பல இடங்களை கைப்பற்றி விடும்.

அதன் பின்னர், சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றினால் கூட உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக இருக்கும் பொழுது, திமுகவினருக்கு இடைஞ்சலாக அவர்கள் இருப்பார்கள் என்று திமுக சார்பில் கருதப்படுகிறது. மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்தால் பத்து வருடங்களாக பதவியில் இல்லாத திமுகவினருக்கு நல்லது என்று ஸ்டாலின் கணக்கு போடுகின்றார்.

Image result for SP VELUMANI SEITHIPUNAL

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்கு அதிமுக சார்பில் ஒரு வலுவான காரணம் இருக்கின்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி செல்லும் ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர்களிடம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றார்.

ஆனால், மத்தியிலும் உள்ளாட்சித் தேர்தலை முதலில் நடத்தி முடியுங்கள், அதன்பிறகு நிதியைப் பற்றி யோசிக்கலாம் என்று பதில் தருகின்றனர். மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதியானது 6 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் எனக்கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்காத பட்சத்தில் இந்த நிதியை மத்திய அரசு கொடுக்க தயாராக இல்லை. இதுகுறித்து திமுக உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியபோது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

எனவே, இந்த தேர்தலை நடத்தினால் தான் 6,000 கோடி வருவாய் தமிழகத்திற்கு கிடைக்கும். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தி விட்டால் இதை அடிப்படையாக வைத்து, அந்த முழு தொகையையும் பெற்று விட்டால், மக்கள் நல பணிகளை முடித்துவிட்டு, வாக்கு வங்கியையும் பலப்படுத்தி விட்டு, அந்த பணத்தை வைத்தே சட்டமன்றதேர்தல் செலவையும் ஈடுகட்டி விடலாம் என்று அதிமுக சார்பில் கணக்கு போடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOCAL BODY ELECTION PLAN OF DMK AND ADMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->