அந்த 4 பேர்., அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலுக்கான வேட்புமனு கடந்த செப். 15 முதல் தொடங்கி உள்ளது. செப்.22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 12 அன்று எண்ணப்படவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்" என்று விஜயகாந்த் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local body election dmdk officers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->