மறைமுக தேர்தலில் வெளியான முடிவுகளின் விவரம்.! வென்றது யார்.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும்,  திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.

 27 மாவட்டகளில் ஊராட்சி தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு இன்று காலை மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அதிமுகவும், திமுகவும் சமமான உறுப்பினர்களை கொண்டிருந்ததால், தேர்தல் நடத்தப்படவில்லை.

சிவகங்கை மாவட்டத்தை தவிர்த்து 26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ள இடங்கள்: கோவை, தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அதிமுகவும் அதன் கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணியில் சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில்  பாமக வெற்றி பெற்றது.

திமுக வெற்றி கைப்பற்றியுள்ள இடங்கள்: மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக 149-க்கும் மேற்பட்ட இடங்களையும், திமுக சுமார் 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

local body chairman and district chairman election result


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->