சட்டமன்ற தேர்தலில் லட்சிய திமுக கட்சி யாருக்கு ஆதரவு.? டி ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் ,கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே கட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், டி ராஜேந்திரனின் லட்சிய திமுக கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என டி ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LDMK not support the assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->