தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர்.! பாஜக மூத்த தலைவர் வெளியிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனால் அந்த இடம் தற்போது காலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு தற்போது கடும் போட்டி நிலவுகிறது. 

இதையடுத்து இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்தி முடித்த பின்னர் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் என பாஜக மேலிடம் அறிவித்தது. இதனால் தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்ற கேள்வி பல நாட்களாக இருந்து வருகிறது. 

தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க 11 பேர் கொண்ட பட்டியலை பாஜக தயாரித்து, பாஜக தேசியத் தலைவருக்கு அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி. பி. ராதாகிருஷ்ணன்,  கே. டி. ராகவன், மதுரை சீனிவாசன், கருப்பு முருகானந்தம்,  ஏ. பி. முருகானந்தம், ஏ. என். எஸ். பிரசாந்த், குப்புராம் ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களை ஒருவரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேர்ந்தெடுப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல கணேசன் செய்தது பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, 10 நாட்களுக்குள் மாநில தலைவர் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. விரைவில் பாஜக தமிழக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

la ganesan says tamilnadu bjp leader


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->